கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவு. மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பு.

முகமாலை கிராம சேவையாளர் பிரிவில் 2186 ஏக்கர் காணியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவுபெற்ற நிலையில் அவை இன்று மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை இத்தாவில் வேம்பொடுகேணி, கிளாலி மற்றும் அல்லிப்பளை கிராம சேவகர் பிரிவில் தொடர்சியாக வெடிபொருட்கள் அகற்ற்பட்டு வருகின்றது.
அதில் முகமாலை கிராம சேவகர் பிரிவில் 2186 ஏக்கர் காணியில் வெடிபொருட்கள் அகற்றபட்டு மக்களிடம் இன்று கையளிக்க்பட்டுள்ளது.
அகற்ற்பட்ட பிரதேசத்தில் இருந்து 87290 கண்ணி வெடிகளும் 196980 வெடிக்காத வெடிபொருட்களும் துப்பாக்கி ரவைகளும் மீட்க்பட்டுள்ளது. இதுவரை கண்ணி வெடிகள் அகற்றபட்டு 270 குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக 270 குடும்பங்களை சேர்ந்த 943 பேர் நன்மை அடைந்துள்ளனர்.
மேலும் 02 தேவாலயங்கள், 03 கோவில்கள், 01 சித்த ஆயர்வேத வைத்தியசாலையும் இதில் அடங்குகின்றது. இதில் இதுவரை குறித்த பகுதியில்
197 பேருக்கு வீட்டு வசதிகளும், 210 கழிப்பறைகளும், 38 கிணறுகளும், 62 குடும்பங்களிற்கு வாழ்வாதாரங்களும், 197 குடும்பங்களிற்கு மின்சார வசதியும் அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகள் இன்று உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் இந்திக்க அநுருத்த, அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews