முல்லைத்தீவு மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

ஜக்கிய மக்கள் சக்தியினால், முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில், பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு, ஒரு தொகுதி சப்பாத்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் பிரதேசத்தில் கல்வி கற்று வரும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் நலன் கருதி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜனின் கோரிக்கைக்கு அமைவாக, ஜக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் முத்துக்குமாரசாமி லக்ஸ்சயனினால், ஆதர்சம் அமைப்பு ஊடாக, 70 பாடசாலை மாணவர்களுக்கு, சப்பாத்துக்கள் வழங்கப்பட்டன

.
மாங்குளம் பிரதேச சபை பொது மண்டபத்தில் வைத்து, பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், சப்பாத்துக்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில்நிகழ்வில், ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரம ரத்ன, புத்திக்க பத்திரன, ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ்,ஜக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் முத்துக்குமாரசாமி லக்ஸ்சயன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகாஜன் ஆகியோர் பங்கேற்று, சப்பாத்துக்களை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews