ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலாளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று காலை (30) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததுடன், அவரின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தான் சிறையிலிருந்தபோது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews