சித்திரவதையில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூவர், சித்திரவதை செய்ததாகக் காவலில் உள்ள சேவ் தி பேர்ல்ஸின், மொஹமட் சுல்தான் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தன்னை சித்திரவதை செய்த மூன்று பேரின் பெயர்களை கோட்டை நீதவான் பிரியந்த பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.

பதினெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதரஸாவில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக மொஹமட் சுல்தான் கைது செய்யப்பட்டார்.

சித்திரவதை காரணமாக தனக்கு இன்னும் முதுகுத்தண்டு குறைபாடு இருப்பதாக அவர் கூறியதையடுத்து, அவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்பத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்கும் நோக்கில், சித்திரவதை செய்யப்பட்டதாக, அல் சுஹாரியா அரபுக் கல்லூரியின் இரண்டு ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மொஹமட் சுல்தானை பிணையில் விடுவிப்பதற்கு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் மறுப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 10 ஆம் திகதி வரை மொஹமட் சுல்தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினத்தில், வைத்திய மற்றும் பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஏப்ரல் 2020 இல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவர் மத்ரஸா பாடாலையில் விரிவுரை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews