33வது மாவட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்.

33வது மாவட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. 2021ம் ஆண்டுக்கான குறித்த விளையாட்டு போட்டியானது இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
இளைஞர் கழகங்கள் பங்குகொள்ளும் குறித்த போட்டியானது அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மாவட்ட ரீதியில் இன்றுமுதல் மோதிக்கொள்கின்றன
.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்கள் மாவட்ட மட்ட போட்டியில் பங்குபெறுகின்றன.
அதற்கு அமைவாக இன்றைய தினம் கபடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் இடம்பெற்றன. குறித்த போட்டிகள் இன்றைய தினம் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதான உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதேவேளை நாளைய தினம் வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளதாக இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது.
மாவட்ட ரீதியான போட்டியில் கபடி, கயிறு இழுத்தல் , வலைப்பந்து, கரப்பந்து, கடற்கரை கரப்பந்து, கரம், கால்ப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கட், எல்லே ஆகிய விளையாட்டுக்கள் போட்டியாக நடார்த்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் மாகாண ரீதியிலு்ம, தேசிய ரீதியிலும் போட்டிகளை சந்தி்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews