பண்ணை பகுதியை தூய்மையாக பேண ஒத்துழையுங்கள்! யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.

யாழ்ப்பான பொலிஸாரினால் இன்று காலை பண்ணையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய யாழ்மாவட்டம் முழுவதிலும் சிரமதான பணியானது பொதுமக்களுடன் இணைந்து பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்றது அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பொலிசாரினால் இன்றைய தினம் பண்ணை கடற்கரைப்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் இரு பகுதியிலும் காணப்படும் கழிவுகளை அகற்றும்  வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது
இந்த வேலைத்திட்டத்தின்போது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீதிகளில்  வீசப்பட்டுள்ள கழிவு  பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு  தூய்மையாக்கப்படவுள்ளது தூய்மையாக்கப்பட்ட பகுதியினை தொடர்ந்தும் தூய்மையாக பேணுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  எமது சிரமதானப் பணியில் யாழ்மாவட்ட சாரணர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மற்றும் விசேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டுள்ளனர் என்றார்..

Recommended For You

About the Author: Editor Elukainews