மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது பாலியல் பலாத்காரம்! 17 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்த நீதிமன்றம்.. |

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான குற்றவாளிக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் மூன்று இலட்ச ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மல்வத்துபிட்டிய, கினிகமவில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில்

விவசாய நிலத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 44 வயது பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர் உறவினர் ஒருவருக்கு வழங்கிய தகவலுக்கமைய ஒரு பிள்ளையின் தந்தையான

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீதிபதியிடம் முன்வைத்த ஆதாரங்களுக்கமைய குற்றவாளியாகக் கருதப்பட்டு

17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நேற்று முன்தினம் 28ம் திகதி வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin