18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாவது நாள் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்ற நிலையில் கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கடந்த வருடம் கல்வி பொது தராதர சாதாரண தரம் பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் உயர்தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்குமாக 25 பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இன்று சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவர்களுக்கு சிசிலியா பெண்கள் பாடசாலையிலும், மத்திய கல்லூரி, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், திருப்பெருந்துறை முருகன் மாணவர்களுக்கு மத்திய கல்லூரியிலும், இந்து கல்லூரி, ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயம், மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு இந்து கல்லுரியிலும் விவேகானந்தா வித்தியாலயம், கல்லடி விபுலானந்தா வித்தியாலயம், இக்ரா வித்தியாலயம், பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு விவேகானந்தா வித்தியாலத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews