எஸ்.ரி.எப். சுற்றிவளைப்பு! – 5 பேர் கைது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, கொழும்பு மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 33 லீற்றர் 500 மில்லிலீற்றர் மதுபானத்துடன் மஹரகம பிரசேத்தை சேர்ந்த 26 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 165 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு வெலிக்கடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தீர்வை வரியின்றி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 35 புகைத்தல் பொருட்களுடன், கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 195 கிராம் மதனமோதகம், மதுபானம் என்பவற்றுடன், எதுல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தியாலம் மாவத்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 50 மில்லிகிராம் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அளுபொல்ல பிரதேத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews