இலங்கை – இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

இந்தியக் கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதிக்கும், இலங்கையின் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு தரப்புப் பயிற்சிகளின் நிமித்தம், இந்திய கடற்படையின் ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், குறித்த பயிற்சிகளைப் பார்வையிடும் முகமாக அந்த நாட்டின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி அனில் குமார் சௌலா இலங்கைக்கு வந்துள்ளார்.

அவர் இலங்கையின் கடற்படைத் தளபதியை நேற்று சந்தித்தபோது இரண்டு நாட்டு கடற்படைகளின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் சௌலா, இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கையில் இருந்து புறப்படும் முன்னர் திருகோணமலைக்கும் அவர் செல்லவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews