வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு! சுமந்திரன் எம்பி பகீர் குற்றச்சாட்டு.

நீண்ட நாட்களாக  சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள் அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாரிடம் தகவல் வழங்கும் போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து போலீசாரிடம் முறையிட்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது.

எனவே பொலீசாருடன் இணைந்தே இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது எனவே இந்த குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்..

Recommended For You

About the Author: Editor Elukainews