யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

நீண்ட காலமாக யாழ் மாநகர சபைக்கென உத்தியோக பூர்வ இணையத்தளம் அற்றிருந்த நிலையில் யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .
யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ் மாநகர முதல்வர் மாநகர ஆணையாளரினால்உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது
இணையத்தள அங்குராரபண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகரசபையின் இணையதளத்தில் யாழ் மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும்  சேவைகளையும் பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews