கிளிநொச்சியில் டிப்பர் விபத்துக்குள்ளானது!

கிளிநொச்சி – டிப்போ சந்தியில் டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 9 மணியளவவில் இடம்பெற்றது. வவுனியா திசையிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏ9 வீதியில் கிரவல் ஏற்றி பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews