கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி கிழக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி, இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி, மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்து ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக் கொண்டார்.
குறித்த போராட்டத்தின்போது சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் 40 வீதமான நிலம் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்று தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews