நெருக்கடிகள் எதிர்வரும் வாரங்களில் குறைவடையும்!

கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பதற்கு முதலீட்டாளர்கள் முன்வருகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
முதலீடுகள் முக்கியமானதே தவிர முதலீட்டாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யுகதணவி மின்னுற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்,
முதலீட்டாளர்கள் முன்வரும்போது ஒப்பந்தங்களில் கைச்சாத்திடாமல் இருக்க முடியாது.
முதலீட்டாளர்கள் வரும்போது விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய திறமை நாட்டின் நிர்வாகத்துக்கு இருக்கவேண்டும்.
முதலீட்டாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல.
கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் இலங்கைக்கு முதலீடுகள் கிடைக்கப் பெறுகின்றமை மகிழ்ச்சிக்குரியது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை தற்காலிகமான பிரச்சினைகளாகும்.
கொவிட் தொற்றின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்த நெருக்கடிகள் அனைத்தும் எதிர்வரும் சில வாரங்களில் குறைந்துவிடும். எனவே பொறுமையாக இருக்குமாறு மக்களிடம் கோருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews