பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் உயிரிந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிடுருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமையும் ஆப்கானிஸ்தானின், குந்துஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதுடன், அமெரிக்கப் படையினர் வெளியேறியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews