யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தில் 4 பேர் கொண்ட ரவுடி குழு தாக்குதல்..! வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி, நடத்துனர் மீதும் தாக்குதல்.. |

யாழ்.சாவகச்சோி பகுதியில் இ.போ.ச பேருந்தில் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோியில் இருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 775 வழி இலக்க பேருந்தில் ஏறிய 4 பேர் கொண்ட

ரவுடி கும்பல் பேருந்து நடத்துனருடன் தகாத வார்த்தைகளால் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்போது அவர்களை பேருந்தில் இருந்து இறங்குமாறு சாரதி கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேருந்து நடத்துனருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தை அவதானித்த வயோதிபர் ஒருவர் நடத்துனர் மீது தாக்குதல்

நடத்துவதை தடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில் பேருந்து ஆசனத்திற்குள் விழுத்திய ரவுடிகள் முதியவர் என்றும் பாராமல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த முதியவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் துரித

விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews