இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார்வயல் பகுதியில் கடந்த 09/10/2021 அன்று நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளம் குடும்பஸ்தருக்கு 4மாத கை குழந்தை ஒன்றும் உள்ளது. குறித்த நபரின் மனைவி கணவனை இன்றுடன் 04நாட்களாக காணவில்லை எனவும் அவர் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகத்தில் தாம் தினம் தினம் வேதனையடைந்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தனது கணவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இது தொடர்பாக சந்தேக நபர் சிலரை தாம் அடையாளப்படுத்தி உள்ளதாகவும் தனது கணவனை பொலிசார் விரைவாக செயற்பட்டு மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews