உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில், கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலைகளின் திறன் வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ …!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர்  கல்லூரி, கொற்றாவத்தை அ.மி.த..க பாடசாலை ஆகியவற்றிற்க்கு  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் வகுப்பறையை சஜித் பிரேமதாஸா அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சிமாட் தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகளை கொண்ட திறன் வகுப்பறையே  நேற்று  இலங்கை எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவல் திறந்து வைக்கப்பட்டது.
முன்னதாக திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்க்காக வருகை தந்த இலங்கை எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித்  பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர்களின் தலமையில் இடம் பெற்ற கல்லூரி இந்நிகழ்வுகளில்  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  அங்கஜன் இராமநாதன்,  எம் ஏ சுமந்திரன் ,ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமா சந்திரா பிரகாஸ்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் தொழிலதிபர் கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews