நல்லூர் மாப்பாண முதலியாரின் இறுதிச்சடங்கு நாளை 10 மணிக்கு.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் சிவபதமடைந்தார். மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

நல்லூர் மாப்பாண முதலியார் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது நல்லூர் இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றினார். இறைதொண்டாக அரும்பணியாற்றிய பெரும் ஆளுமை எம்மை விட்டு இறையடி சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Recommended For You

About the Author: Editor Elukainews