வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சரவை உபகுழுவில் உரையாற்றிய அமைச்சர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இதற்காக அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார பேருந்துகளை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

தற்போது, தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 மின்னேற்றும் நிலையங்க நிலையங்களை அமைத்துள்ளது. மேலும் அந்த எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது ஒரு முறை சார்ஜ் செய்த வாகனமொன்று பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய தூரம் 300-350 கிலோமீற்றர் ஆகும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews