லண்டனில் சிறுமி ராதிகா மாயம்! – பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

லண்டன் – ஹாரோ பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 15 வயதான ராதிகா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுமி இறுதியாக நேற்று காலை 08.30 மணியளவில் ஹாரோவின் ஈஸ்ட்கோட் லேனில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமி தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளதாகவும் லண்டன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த பதிவில்

“தயவுசெய்து எங்கள் மகள் ராதிகாவைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள். அவள் நேற்று முதல் காணவில்லை. கடைசியாக மதியம் தெற்கு ஹாரோவில் காணப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews