யாழ்.தென்மராட்சியில் மீண்டும் கொரோனா தொற்று உயர்வு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சியை சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். அன்ரிஜென் பரிசோதனைகளிலேயே நேற்று இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவர்களில், 8 பேர் அன்ரிஜன் பரிசோதனை மூலமும், மூவர் பி.சி.ஆர் சோதனை மூலமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.
இதேவேளை தென்மராட்சியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நாளாந்தம் 10 – 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். குறிப்பாக எழுதுமட்டுவாழ், கொடிகாமம் பகுதிகளிலேயே தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதனால், வரும் நாட்களில் குறித்த பகுதிகளில் எழுமாற்றான பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews