இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் சட்டம்

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிராக எரிசக்தி துறையின் நிபுணரான விதுல ரலபனாவவினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, ஜூன் 24ஆம் திகதி மனுவை திரும்பப் பெற உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கட்சியினருக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews