சுகாதாரத்துறை சிற்றூழியர்கள் இன்று போராட்டம்.

நாடளாவிய ரீதியில் மருத்துவ மனைகளில் பணியாற்றும் சிற்றுளியர்கள் இன்று காலை ஆறுமணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை அடையாள போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுமாக வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்க கோரியும், சீருடை கொடுப்பனவை அதிகரித்து வழங்கக் கோரியும், காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும், கொரோணா தொற்று ஏற்பட்ட ஊழியர்களின் விடுப்பு அதிகரிக்க கோரியும், மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க கோரியுமே இப் போராட்டம் இடம் பெற்றது.இதில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்கள் கலந்து கொண்டு தமது கோசங்களை முன்வைத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews