விளாவூர் யுத்தம் – 2024 இல் மகுடம் சூடியது காஞ்சிரங்குடா ஜெகன் அணி! 

மட்டக்களப்பு – விளாவட்டவான்    ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே மாதம் 3ம்,4ம் மற்றும் 5ம் திகதிகளில் ராஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 27 அணிகள் களம் கண்டிருந்தன.
இதில் 1ஆம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் அணியும், 2ஆம் இடத்தினை அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியும், 3ஆம் இடத்தினை பனையறுப்பான் கஜமுகா அணியும், 4ஆம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் பெற்றுக்கொண்டன.
குறித்த உதைபந்தாட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews