வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்…!

அவுஸ்திடேலியாவில்  தொழில் மற்றும்  கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று கொழும்பு5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைத்திட்டம் இலவசமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையில் செல்வதற்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம் என்பதுடன்,  இதில் அவுஸ்திரேலியாவின் பிரதான குடியேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்டதரணிகள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

அத்துடன் மாணவர் விசா, ஸ்பொன்ஸர் விசா உட்பட அனைத்து விசாக்களும் பெற்றுக் கொள்ளும் முறை தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படும்.

அத்துடன் இதன்போது, சரியான பல்கலைக்கழம் ஒன்றை தெரிவு செய்தல், குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான பாடநெறியை தெரிவு செய்தல், புலமைப்பரிசிலுக்கு அவசியமான தகுதி பெறுதல் ஆகியவை தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

மேலும் புலமைப்பரிசிலுக்கு ஈடுபடுத்தல், நிதி தேவைக்காக சரியான ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழில் விசாவுக்கு அவசியமான அனுசரனைக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய சரியான வழிமுறை தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews