திருகோணமலை உதயபுரி கிராமத்திற்க்கு ரூபா 22 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை இன்று கையளிப்பு…!

திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரி முத்துக்குமார சுவாமிகள் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று காலை 11:00 மணியளவில் அறநெறி பள்ளி தலைவர் ஐ.சிவராசா தலமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டதுடன் சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 22 இலட்டம் பெறுமதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கட்டிடத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் சம்பிர்தாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்ததுடன் நடுகல்லையும் திரை நீக்கம் செய்து வைத்ததார்.

தொடர்ந்து மங்கல சுடர்களினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான தாயபாரன், அந்நிதியான் ஆச்சிரம பிரதிநிதி கஜானன், செல்வநாயகபுரம் உதயகிரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி ஆலய பரிபாலனசபை தலைவர் விஜேந்திரன், செயலாளர் ரா.சிவராசம், பொருளாளர் மு பாக்கிய நாதன், உதயபுரி கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் போ.கமலகாசன், உதயபுரி சனசமூக நிலைய தலைவர் ஆர் கே கோணாமலை, அறநெறி ஆசிரியர் பா.கோகிலவாணி, உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பஞ்சபுராணம் ஓதப்பட்டதுடன், வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, என்பன இடம் பெற்றன.

தலைமை உரையை உதயபுரி அருள் மிகு முத்துக் குமாரசுவாமி ஆலய தலைவர் விஜேந்திரன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து சிறப்பு உரைகளின் நிகழவின் பிரதம சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து மாணவர்களின் நடனம், பேச்சு, உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
தொடர்ந்து மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், வழங்கிவைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வரவர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையிலான தொண்டர்கள், திருமலை செல்வநாயகபுரம் முத்துக் குமாரசுவாமிகள் அறநெறி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், சனசமூக நிலைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உதயபுரி கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews