மதீஷவின் திறமையை பாராட்டிய மலிங்க

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் மதீஷவின் திறமையினை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“நேற்றைய மதீஷவின் வெளிப்பாடு,எங்களுக்கு எதிராகச் செய்தாலும் மிகவும் ஈர்க்கப்பட்டது. அவர் தனது கட்டுப்பாடு, கோடு மற்றும் நீளத்தை கணிசமாக திட்டமிட்டுக் கொண்டுள்ளார்.உலகக் கிண்ணத்திற்கு வழிவகுக்கும் அவரது ஃபார்ம் இலங்கை அணிக்கு முக்கியமானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews