இந்திய துணை தூதரகம் முன் போராட மீனவர் சங்கங்கள் ஏற்பாடு , வெள்ளிக்கிழமை முற்றுகை.

தொடர்சியாக. எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்டாவது அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவாகார செயலர் வருகைதந்த போது தமிழ் அரசியல் வாதிகள் எவரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் அவருடன் பேசவில்லை என்றும் தமது பிரச்சினையை பேசுவதற்கு யாரும் இல்லை என்றும், இந்நிலையிலேயே தாம் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளதாகவும், தமது மீனவர்கள் பல கோடி சொத்துக்களை இதுவரை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews