கிழக்கில் ஸாரான் குழு இயங்குகின்றது ஜிகாத்தில் இருந்து பிள்ளையான் கூட்டம் வரை ஆயுதங்கள் இருக்கின்றது– (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்

கிழக்கு மாகாணத்தில் ஸாரானின் குழு  இயங்கி வருவதுடன் அல்ஜிகாத்தில் இருந்து பிள்ளையான் கூட்டம் வரைக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர்.எனவே  அந்த ஆயுதங்கள்   கலைக்கப்பட வேண்டும் அதேவேளை நா.உறுப்பினரான ஹரீஸ் கல்முனை தமிழ் வடக்கு பிரதேச செயலகம் தமிழருக்கு வழங்க கூடாது என இனவாதத்தை கக்கி  இஸ்லாமாபாத் என்ற பெயரில் 350 முஸ்லீம் மக்களை குடியேற்றி அரபு இராஜ்சியம் உருவாக்கிவருகின்றார் என ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெய்ஸ் ஓவ் மீடியா கற்கைநிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் கடந்த 1993ம் ஆண்டு அமைச்சின்  தீர்மானத்துக்கு அமைய தரமுயர்தப்பட்டு ஒரு முழுமையான பிரதேச செயலகமாக செயற்பட்டுவந்தது அதில் தரம் 2  தொடக்கம் தரம் 2 வரையிலான 15 க்கு மேற்பட்ட செயலாளர்கள் சேவையாற்றி வந்துள்ளனர்.

இன்று ஹரீஸ் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சில தனவந்தர்கள் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அந்த பிரதேச செயலகம் வழங்ககூடாது என்று இனவாதத்தை கக்கி கொண்டு கிழக்கில் தமிழ்; முஸ்லீம் மக்கள் ஒன்றினைந்து வாழுகின்றதை இல்லாமல் செய்யும் செயற்பாட்டின் எதிரொலிதான் வடக்கு தமிழ் பிரதேச செயலகம்.

1993 ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கல்முனை வடக்கு தமிழ் உருவாக்கப்பட்டு அது வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டு இயங்கிவந்தது  அதேவேளை வர்த்தமாணி செய்யாது அமைச்சரவையின் தீர்மானம் இல்லாமல் லாகுகலை,காரைதீவு,நாவிதன்வெளி,ஓட்டுமாவடி ,கிரான் இப்படி பலதரப்பட்ட பிரதேச செயலகங்கள் இன்று தரம் ஒன்று தரம் இரண்டு கொண்ட பிரதேச செயலகங்களாக முழுமையாக செயற்பட்டுவருகின்றது.

இந்த பிரதேச செயலகத்தில் கீழ் 29 கிராமசேவகர் பிரிவில் இன ரீதியாக 36,346 பேர் வாழ்ந்துவருவதுடன் தமிழ் மக்கள் 32,958 பேரும், முஸ்லீம் மக்கள் 3624 பேரும் சிங்களவர்கள் 124 பேரும் 45 கோயில்களும், 12 கிறிஸ்தவ தேவாலயங்களும் 3, பள்ளிவாசல்களும் ஒரு விகாரையுமாகும். இதில் பெரும்பான்மை இனத்தை சோந்தவர்கள் தமிழ் மக்கள் தமக்கான பிரதேச செயலகத்தின் அதிகாரத்தை தருமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பிரதேச செயலகம் ஆரம்பத்தில் கணக்காளர் வங்கி கணக்கு இருந்துள்ளது ஆனால் அது ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்துக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று சீ என்ற கிராமசேவகர் பிரிவில் ஒன்று கிராம சேவகர் பிரிவு, ஒன்று சி. இரண்டு, இரண்டு ஏ,  மூன்று ஆகிய 5 கிராம சேவகர் பிரிவுகளில்  இஸ்லாமாபாத் என்ற ஒரு வர்தமாணி பிரசுரம் செய்யப்படாத பெயரை கொண்டுவந்து அங்கு 145 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேரை கொண்ட முஸ்லீம் மக்கள் குடியேற்றப்பட்டு அங்கு தனிய ஒரு அரபு இராஜச்சியமாக உருவாக்குவதற்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல அங்குள்ள தமிழ் பிரதேச செயலக பிரதேச செயலாளர்களுக்கு ஸாரான் இன்னும் சாகவில்லை ஸாரனின் ஆட்கள் இருக்கின்றோம் கவனம் என  கடிதங்கள் அனுப்பபட்டு வருகின்றது எனவே ஸாரானின் குழு இருக்கின்றது இயங்குகின்றது.
எனவே கிழக்கு மாகாணத்தில் அல்பத்தா அல்ஜிகாத், ஜிகாத் அமைப்பில் இருந்து பிள்ளையான் கூட்டம் வரைக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர்.எனவே எனது தலைமையில் 10 பேருக்கு கை துப்பாகி தருவார்களானால் அந்த ஆயுதங்களை என்னால் கலைந்து தரமுடியும்.

அதேவேளை மலையக்தில்  1940 சிடபிள்யூ என்ற அமைப்பை உருவாக்கி தேயிலை கொழுந்து பறிக்கும் அப்பாவி மக்களிடம் மாதசந்தா மூன்றில் ஒரு பங்கு மாதாந்தம் வழங்கி வந்தனர் இன்று ஆயிரம் ரூபா சம்பளத்தில் 333 ரூபா என மாதம் பலகோடி ரூபாய்களை கடந்த 80 வருடகாலமாக அதில் அறவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணத்தை விளையாடி பழக்கப்பட்ட கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான்.

இன்று சிலோன் மேற்றர், ஜெம்ஸ் குளோபல் என்ற இரு கம்பனிகளை கொண்டுவந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பொத்துவில் பாணமை பிரதேச செயலாளர் வரைக்கும் உள்ள கடல் ஓரத்திலுள்ள இல்மனைற் அகழ்வதற்கு பிரதேச செயலாளர்களை அனுமதிகொடு எனவும் சிலர் அனுமதி கடிதம் வழங்கியுள்ளதாகவும் அதில் அனுமதி கொடுக்க மறுகப்பவர்களை நீ அரசாங்கத்துக்கு எதிராக கதைக்கிறீயா  என உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவித்ததாக விரட்டி வருகின்றார்; இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்படுகின்ற ஒரு செயற்பாடு.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் ஆளுநரை நியமித்தால் கிழக்கு முன்னோறும் என்ற அடிப்படையில் செந்தில் தாண்டமானை நியமித்தnபுhதும் இன்று கிழக்கு மாகாணசபை கஜானாவில் ஒரு சதம் கூட இல்லை எல்லாத்துக்கும் தரகுபணம்.

வாழைச்சேனை கடதாசி ஆலை 327 பேரை கொண்டு செயற்பட்ட ஆலை இதில் இப்போது 120 பெயர்தான் வேலை செய்கின்றனர். 2020 கெரியன் கம்பனி அதனை பாரம் எடுத்து 500 பேருக்கு மெதாழில் வழங்கலாம் என பார்த்தால் அங்கு இயந்திரம் ஒன்றும் இல்லை எல்லாம் விற்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று முஸ்லீம் செல்வந்த வர்த்தகருக்கு தோல் கம்பனி மற்றும்  சூரிய ஒளி மின்சார கம்பனி குடிநீர் கம்பனி ஆகியவை அமைப்பதற்கு ஜனாதிபதி வழங்க சொன்னதாக 80 ஏக்கர் காணியை செந்தில் தொண்டமான் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் பெயரை விற்றுக் கொண்டு கிழக்கில் காணிகளை விற்கப்படுகின்றது இவ்வாறு மாங்கேணில் 45 ஏக்கர் காணி இதை வெளிக் கொண்டுவர ஒருவரும் இல்லை இங்கு உள்ள அரசியல்வாதி எல்லோரும் கொள்ளைக்காரன்கள் எனவே மற்ற கொள்ளைகாரனை காட்டி கொடுப்பான் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை  நியமித்து செந்தில் தொண்டமானின் விசாரணை செய்யவேண்டும்.

அதேவேளை ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு பங்கு உண்டு பிள்ளையான் ஜோசப்பரராஜசிங்கம்; கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்தார் அந்த நேரம் தாடிவளர்த ஸரானின் உறவினரான இரண்டு நபர்கள் அங்கு இருந்தது தெரியும் எனவும் அவர்களுக்கும் ஜஎஸ்ஜஎஸ் தீவிரவாதத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என ஒரு கூட்டத்தில் தெரிவித்தார் எனவே அவர் அதனை அரசுக்கே புலனாய்வுக்கு தெரிவிக்கவில்லை.

இப்போது அவர் செய்த கொள்ளை கொலைகள் அபகரிப்புக்களை மறைப்பதற்காக தன்னை ஒரு அரசியல் மேதையாக காட்டவேண்டும் அதற்கு ஞானம் என்ற ஆசிரியரை வைத்து எழுதி புத்தக வெளியிட்டுள்ளார்.

எனவே எவர் வந்தாலம் இந்த ஓகஸ்ட் மாதத்திற்கு  பின்னர் பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் செயற்படும் எனவே இனவாதம் மதவாதம் இருக்குமானால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாது என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews