யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

வைத்தியசாலையில் கடமை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊழியரை சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இரு இளைஞர்கள் அவரை மறித்து அவர் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பென்ரனுடன் கூடிய முறுக்கு சங்கிலி 2 அரை பவுண், மெட்டி மோதிரம் அரை பவுண் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews