இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை..!

நாட்டில் இடம்பெறும் இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, பொதிகள் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தனது எச்சரிக்கை செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தங்கள் விபரங்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பை இலங்கை வங்கி தமது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews