திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் நிலையம் வலி வடக்கில் திறந்து வைப்பு!

வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில்  திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் இன்று(20)  திறந்து வைக்கப்பட்டது
 மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில்”பெறுமதி” எனும் பெயருடன் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை
யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை சுகாதாரவைத்திய அதிகாரி திரு.பரா நந்தகுமார் மற்றும் save a life    நிறைவேற்று பணிப்பாளர் திரு .க ராகுலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்கள்.
இவற்றுடன்  பசுமை இயற்கை பசளை  அறிமுக நிகழ்வும், உலக மண் தின வெற்றியாளர்களுக்கான பாராட்டுப் பத்திரமும்  வழங்கப்பட்டது
இதேவேளை  வாரநாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், சனிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிவரையும்  இந்நியையமூடாக சேவையாற்றுவதுடன் , பொதுமக்கள் கழிவுகளை குறித்த நிலையத்தில் வழங்கி பதிவு அட்டையை பெற்று நிறைக்கேற்ற கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்

Recommended For You

About the Author: Editor Elukainews