சேந்தாங்குளம் கடலில் இருவர் மூழ்கிய நிலையில் இருவர் சடலமாக மீட்பு!

இன்றையதினம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டது.
தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (திருமணம் செய்து இளவாலையில் வசித்து வருகிறார் – வயது 37), மற்றும் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த சிவனேசன் திபிசன் (வயது 21) என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர். இளவாலையில் திருமணம் முடித்து நிலையில் அங்கு வசித்து வருகிறார். இந்நிவையில் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி புரியும் இளைஞர் ஒருவரும், குறித்த விருந்தினரும் இன்று மாலை கடலில் குளிப்பதற்கு சென்றனர்.
இந்நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு மற்றையவர் முயன்றுள்ளார். இந்நிலையில் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இரருவரது சடலங்களுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews