வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அதிக வெப்பம் நிலவும் போது 20 நிமிடங்களுக்கு அதிகமாக பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் சாலைகளில் உள்ள விலங்குகளும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதுடன்,

அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவது அத்தியாவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழையும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews