சில பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்!

அதிகபட்ச கொள்ளளவிற்கு தண்ணீர் விடப்பட்டாலும், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் சில நுகர்வோருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை என்று அவர் சுட்டியுள்ளார்.

தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் துணை பொது மேலாளர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய நிலவரத்தில் சில பகுதி மக்களுக்கும் நீர் வழங்கல் திட்டங்களின் முடிவில் உள்ள மக்களுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து நீர் வழங்கல் அமைப்புகளும் இந்த நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி இயங்கி வருவதாகவும்,

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமான நீர் கொள்ளளவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews