கிழக்கு ஆளுநருக்கு வலுப்பெற்று வரும் ஆதரவு

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்   நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று அம்பாறை, அரந்தலாவ சர்வதேச பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உட்பட 150 பௌத்த மதகுருமார்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தலைமை மதகுரு,

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மூவின  மக்களையும் மதித்து செயற்பட கூடியவர், கடந்த காலங்களை விட தற்போது கிழக்கு மாகாணத்தில்  மூவின மக்களுக்கும்  ஒரே விதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என  தெரிவித்தார்.

மேலும் ஆளுநரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் இருப்பதாகவும், மூவின மக்கள் மத்தியிலும் ஆளுநருக்கு அதிக மரியாதை காணப்படுவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews