வல்வெட்டித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகத்திற்கு சீல்!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகமானது நேற்றுமுன்தினம் சீல் செய்யப்பட்டது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 2024.03.15 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது அன்றைய தினமே விசாரணை இடம்பெற்றது.

அதைத் தொடர்ந்து  சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் உற்பத்தி களஞ்சியப்படுத்தல், விற்பனை, விநியோகம் இடம்பெற்றமையால் வெதுப்பகத்திற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச் சுகாதார பரிசோதகரால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

திருத்த வேலைகள் முடிவடைந்து வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தும் வரை சீல் வைத்து மூடுமாறு மன்றானது கட்டளை பிறப்பித்தமையை தொடர்ந்து கடை சீல் வைத்து மூடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews