இலங்கையர்கள் நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக செலவழிக்கின்றனர்..

புகையிலை பாவனையால் உலகளவில் வருடாந்தம் சுமார் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், இலங்கையில் தினமும் 50 பேர் அகால மரணமடைவதாக இலங்கை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இலங்கை மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் நிறைவேற்றும் பணிப்பாளர் சம்பத் டி சேரம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது இலங்கையர்கள் நாளொன்றுக்கு 520 மில்லியன் ரூபாவை (52 கோடி) சிகரெட் பாவனைக்காக செலவிடுகின்றனர்.

தற்போது இலங்கையில் சிகரட் பாவனை வெகுவாக குறைந்துள்ளது. GATS கணக்கெடுப்பின்படி (Global Adult Tobacco Survey 2020) இலங்கையில் சிகரட் பாவனை 9.1% ஆக குறைத்துள்ளது.

இலங்கையில் சிகரட் பாவனை குறைவடைந்து வருகின்ற போதிலும், இன்னமும் எமது நாட்டில் சுமார் 15 மில்லியன் மக்கள் சிகரட் பாவனை செய்கின்றனர். சிகரெட் பயன்பாடு ஒரு நாட்டில் சுகாதார பிரச்சினைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், சிகரட் பாவனையினால் காற்று, நீர மற்றும் நிலம் மாசுபடுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எமது நாட்டின் குறைந்து வரும் சிகரட் பாவனையை மேலும் குறைப்பதற்காக, மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான அதிகார சபை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பில் பல வருடங்களாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனையான நிலையே எனினும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கு பயனளிக்கக்கூடிய சில பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி, மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
தனி சிகரட் விற்பனை தடை
இலங்கையில் விற்கப்படும் சிகரட்டுகளில் 93.6% வீதமான சிகரட்டுக்கள் தனி சிகரட்டுக்களாகவே Иринами Сей. (Single Cigarette Sales – Bait for the Vulnerable Groups, ADIC and a Global Tobacco Industry Watchdog 2022) இந்த நிலைமையானது.

சிகரட்டின் பாவனையைக் குறைக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. மேலும் உலகில் 107 நாடுகள் ஒற்றை சிகரட் விற்பனையைத் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது எனினும் இலங்கையின் இன்னும் தனித்தனியாக சிகரட் விற்பனை செய்யப்படுகின்றமை தேதனைக்குரிய விடயமே.

தனி சிகரட் விற்பனையை தடை செய்வதன் மூலம், சிகரட்டை கொள்வனவு செய்யும் சக்தி குறைந்து, அதன் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிகரெட் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. மேலும், தனிப்பட்ட விற்பனையைத் தடைசெய்வது. சிகரட் பெட்டிகளில் உள்ளன.

எச்சரிக்கை தகவல்களின் பயன்பாட்டையும், அவற்றை பயன்படுத்துவோர் பார்க்கும் அளவையும் அதிகரிக்கிறது. இவ் எச்சரிக்கை தகவலின் மூலம் சிகரட் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் சிகரட்டின் மீதுள்ள கவர்ச்சியைக் குறைக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சிகரட் LIT ஊக்கப்படுத்துவதற்கான மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று தனி சிகரட் விற்பனையைத் தடை செய்யவது என பரிந்துரைக்கிறது. உலகில் வல்லரசு நாடுகளின் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பயனுள்ள கொள்கைகள் எமது நாட்டில் புகையிலை நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் வருத்தமான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews