3000 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் குறித்த கலந்துரையாடலின்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews