இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. களுத்துறை  தொடக்கம் மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மேலும், வடமேல் மாகாணத்திலும் அத்துடன்  ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்  மணித்தியாலத்திற்கு 30 ‐ 35 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து  காற்று வீசும்.

கொழும்பு  தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன்  மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் . எனவே பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews