கிரானில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமங்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர்  காசு சித்திரவேல் தலைமையில்  பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (28) திகதி இடம் பெற்றது.
ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இருபதாயிரம் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிரானில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற நிகழ்வில் 86 காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் உள்ளிட்ட ஆளுநரின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews