செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது

பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மங்களவிளக்கேற்றி தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினர் ஆரம்பித்துவைத்தார்

75M ஓட்டம்(ஆண்/பெண்)
100M ஓட்டம்(ஆண்/பெண்)
200M ஓட்டம்
கொடி நாட்டல்,அஞ்சல்,கலப்பு அஞ்சல்,கடந்துசெல்லல்,பெற்றோர் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசில்கள்,வெற்றிக் கேடயங்களை கெளரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைத்ததுடன் யா/செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட அருட்சகோதரிகள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என பலர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews