மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தகுதியான அதிபர் பக்கமே நான்.. அமைச்சர் டக்ளஸ் கருத்து….!!!

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மத்திய கல்லூரியை அமரர் இராசதுரை எவ்வாறு வழிநடத்தியவர் என பலருக்கு தெரியும் துரதிருஷ்டவசமாக அவரது உயிர் பறிக்கப்பட்டது.

தற்போது யாழ் மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசியல் தலையீடு இருப்பதாக கேட்கிறீர்கள்.

அரசியல் தலையீடு இல்லாமல் எங்காவது பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதா என கூறுங்கள் பார்க்கலாம்.

மத்திய கல்லூரி அதிபர் விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டிய தேவை இல்லை ஆனால் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

ஆகவே மத்திய கல்லூரி விடையத்தில் யார் கல்லூரியை முன்னோக்கி கொண்டு செல்வார் என கருதுகிறேனோ அவர் பக்கமே நான் நிற்பேன் அரசியல் எனக் கூறுபவர்கள் கூறிவிட்டு செல்லட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews