யாழில் நிறைவெறியில் இனத்துவேச கருத்துக்களுடன் தமிழ்ப் பொலிசாரை ஏசிய 2 சிங்களப் பொலிஸாருக்கு விளக்கமறியல்!!

இனத்துவச கருத்துக்களை தெரிவித்து, சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை இரவு நிறை வெறியில் உள்நுழைந்து சக பொலிஸாருடன் முரண்பட்டு , தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இனத்துவச கருத்துக்களை கூறி முரண்பட்டுள்ளனர்.

அதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை நிர்வாக ரீதியான விசாரணைகளை முன்னெடுத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் , பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews