ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுகை நிகழ்வு யாழ்ப்பாண கந்தர்மட பழம் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தில்,  ஊடக இணைப்பாளர் பத்மநாதன் தர்மினி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க  கலைப்பணி  ஆற்றுவோம் எனும் கருப்பொருளில், கலை நிகழ்ச்சிகள் என்றால் என்ன?கலை நிகழ்ச்சிகளை எப்படி  நிகழ்த்துவது? கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போது மக்கள்  மத்தியில் ஏற்படக் கூடிய விளைவுகள் யாவை?
போன்ற வினாக்கள் தொடர்பாக, அண்மையில்  யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு  பல குழப்பமான கதையாடல்கள் எமது  சமூகத்தில் நிலவுகின்றமை தொடர்பாக ஆற்றுகையிடப்பட்டது.
இத்தகையதோர் பின்னணியில்  ஈழத்தமிழரிடையே  கடந்த காலங்களில்  நிலவிய கலை நிகழ்ச்சிகள் எத்தகையன? அவை நிகழ்த்தப்பட்ட முறைமைகள் எத்தகையன?அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விளைவுகள் யாவை?  பற்றி விரிவாக துறை சார்ந்த அறிஞர்களினால் விரிவாக கலந்துரையாடப்பட்டன. மேலும் எமது சமூகத்தை ஆற்றல் மிகு சமூகமாக மாற்றுவதற்கு நமக்குத் தேவைப்படும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய உரையாடல்களும் இடம்பெற்றன.
இச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள்,  இணையத்தளம் மற்றும் வலைய வாணொலி இயக்குநர்கள், யாழ்ப்பாண பண்பாட்டு கூடத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews