விமானத்துக்குள் எலி புகுந்ததால் எலியை அகற்ற மூன்று நாட்கள் சென்றது.

விமானத்துக்குள் எலி புகுந்ததால் எலியை அகற்ற மூன்று நாட்கள் சென்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குள் எலி. நான்கு நாட்களாக சேவை நிறுத்தம் !

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எலி ஊர்ந்து சென்றதால், விமானம் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டு தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் துறைத் தலைவர் இன்று (26) தெரிவித்தார்.

லாகூரில் இருந்து கடந்த 22ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை விமானம் வந்தடைந்தது, விமானத்தில் இருந்து எலியை அகற்ற மூன்று நாட்களானதாகவும் அவர் கூறினார்.

லாகூர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது எலி ஒன்று உள்ளே நுழைந்ததாகவும், பயணிகளின் பொதியில் இருந்து அந்த எலி விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

எலியை அகற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்த வேண்டியேற்பட்டதாகவும், இதனால் விமானத்தில் உள்ள எலியை அகற்ற 3 நாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

எலி விமானத்திற்கு தீங்கு விளைவித்ததா என்பதை தொழில்நுட்ப பிரிவினர் தற்போது சோதித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews