மாணவி துஷ்பிரயோகம்! வயோதிபருக்கு விளக்கமறியல்!

14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ​ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, பரிசோத​னைக்காக, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews