12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம்

நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற  12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான
பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பரணீதரன், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுகன்யா, சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் வைத்தியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கமைய நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்றுவருகின்ற (கிளினிக்) 12 – 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி (Pfizer) ஏற்றும் விசேட செயற்திட்டமானது இன்று  01.10.2021 வெள்ளிக்கிழமை இலிருந்து பருத்தித்துறை  வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் மேற்கொள்வதற்கான  ஒழுங்கமைப்புக்கள்  செய்யப்பட்டுள்ளன.
இத்தடுப்பூசியினை தற்போது பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான சிறுவர்கள் அல்லது சிறுவர்களின் பெற்றோர்கள் 0776284666, 0761275210 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் இவை தொடர்பான மேலதிக விபரங்களையும் குறித்த தொலைபேசி இலக்கங்களினை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை  பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews